நான்கே வயதான சிறுவனுக்கு தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் , நாடிப்பகுதியிலும் ஆசியர் ஒருவர் தீயினால் சூடு வைத்தார் என சிறுவனின் பெற்றோரினால் சங்கானை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் உள்ள முன்பள்ளியில் குறித்த சிறுவன் கல்வி கற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறுவன் , தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாக கூறி முன்பள்ளி ஆசிரியர் தீக்குச்சியை நெருப்பு மூட்டி சிறுவனின் வாயிலும் நாடியிலும் தீயினால் சூடு வைத்துள்ளார்.