சுமார் 25 கோடி ரூபா பணத்தை வங்கிக் கணக்கிலும் வைப்பிலும் வைத்திருந்த மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றவாளியான சஹான் அரோஸ் ஜயசிங்க என்ற மத்துகம சஹானின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மத்துகம நீதிவான் நீதிமன்றில் விமானப் பயணத் தடை உத்தரவைப் பெற்றதாகவும், அதன் பிரகாரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.