Date:

அரசாங்க நிரந்தர சேவையில் 32 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல துறைகளிலும் பணிகளுக்காக  இணைத்துக்கொள்ளப்பட்ட 32 ஆயிரம் பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் நேற்று வெள்ளிக்கிழமை (9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்கள் தற்போது பல்வேறு அரசாங்க  நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,  இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பினரை வெளிநாட்டுப் பணிகளில்  ஈடுபடுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தொழில்திறன் பரீட்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...