Date:

உலகக் கிண்ண கால்பந்து- காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது குரோஷியா

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது.

முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில்  4:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம்   அரை இறுதிக்கு குரோஷியா தகுதி பெற்றது.

கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள எடியூகேசன் அரங்கில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை.

அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேர ஆட்டத்தில் இடைவேளைக்கு முன் உபாதை ஈடு நேரத்தின்போது அணித்தலைவர் நேய்மார் கோல் புகுத்தினார்.

எனினும், 117 ஆவது நிமிடத்தில் குரோஷியாவின்  புரூனோ பெட்கோவிச் புகுத்திய கோல் மூலம் கோல் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது.

இதனால் மேலதிக நேர ஆட்டம் 1:1 விகித்தில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில் குரோஷியா 4:2 விகிதத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...