Date:

மன்னாரில் மாண்டஸ் சூறாவளி:184 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தெரிவிக்கையில்,

 

 

மன்னார் மாவட்டத்தில் வியாழக்கிழமை (08) இரவு மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தால் மன்னார் , நானாட்டான்,  மாந்தை மேற்கு , மடு ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களில்  மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

 

மீன்பிடி வலைகள் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய் உள்ளன.

 

 

இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 50 குடும்பங்களைச் சார்ந்த 184 பேர் பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளனர்.

 

11 வீடுகள், ஒரு சிறு வியாபார குடிசை மற்றும் கடை ஆகியன சேதமடைந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாகியுள்ளன.

மீன்பிடி படகுகள் பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளது. அத்தோடு 10 மீன்பிடி வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளது.

7 படகுகள் சேதமடைந்துள்ளன. பல ஏக்கர் விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...