ஏழெட்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார அமைச்சர் முயற்சிப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதிற்கு இடமளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை கேட்கும் மின் கட்டணத்தில் திருத்தம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை. மேலும் தற்போதைய தரவுகளின்படி மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.