மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள, கணக்கீடுகள் சரியானவையல்ல என்பதினால் தற்போதைய சந்தர்ப்பத்தில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.