வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பொதுவெளியில் வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இப்படியிருக்க தற்போது வெளியான தகவலின்படி, கடந்த அக்டோபர் மாதம் வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்திலுள்ள ஒரு பள்ளியில் சந்தித்துக்கொண்ட 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பல தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடக நிகழ்ச்சிகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதமே அந்த சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஹைசனில் உள்ள ஒரு விமானநிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆனபிறகும் இப்போதுதான் அதுபற்றிய தகவல் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.