கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மிகவும் அத்தியாவசியமான மருந்து பொருட்கள் உட்பட 80இற்கும் மேற்பட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக இந் நிலைமை காணப்படுவதாகவும், சிகிச்சைக்காக வருகைதரும் பொது மக்கள் பெருமளவுக்கு மருந்துப் பொருட்களை மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்கே வைத்தியர்கள் எழுதிக்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.