Date:

முஸ்லிம் கட்சிகள் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் – மக்கள் காங்கிரஸ்

ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் காதல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கமால் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்தித்து முஸ்லிங்களுக்கு உள்ள பிரச்சினை தொடர்பில் தீர்வு வேண்டும் என என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் ஏ.எல். கால்தீன் தெரிவித்தார்.

காணிப்பிரச்சினைகள், முஸ்லிங்களின் இருப்புக்கான பிரச்சினைகள், உரிமைகள், உடமைகளுக்கான பிரச்சினைகள், விவசாயிகள் உட்பட தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பேச முன்வரவேண்டும். முஸ்லிங்களுக்கு இலங்கையில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் ஏ.எல். கால்தீன் தெரிவித்தார்.

இன்று (06) செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு தெளிவை உண்டாகும் பொறுப்பை ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் ஜனாதிபதி வழங்க இருக்கும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வு திட்டத்தை ஒற்றுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றேன்.

மறைந்த அஸ்ரப் மு.காவை உருவாக்கி முஸ்லிங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற போராடினார். ஆனால் இப்போது முஸ்லிங்கள் மத்தியில் அந்த நிலை மங்கிவிட்டது.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டத்தை முன்மொழிய வேண்டும். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...