Date:

மறுசீரமைப்பு இல்லாமல் நாட்டிற்கு எதிர்காலம் ஒன்றில்லை – விக்டர் ஐவன்

மறுசீரமைப்பு இல்லாமல் நாட்டிற்கு எதிர்காலம் ஒன்றில்லை மறுசீரமைப்பிக்காக அரசாங்கம், எதிர்க்கட்சி, போராட்ட இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரையும்ஓர் இடத்துக்கு கொண்டுவரும் பொறுப்பை ஏற்க நாம் தயார்.என
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்க தொடக்க நிகழ்வில் சிரேஷ்ட்ட ஊடகவியலாளர், விக்டர் ஐவன் தெரிவித்தார்.

இலங்கையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மக்கள் மத்தியல் முன்னெடுக்கும் ஆளும் அரசாங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள  மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம்  தனது முதலாவது ஊடகச் சந்திப்பை நேற்று கொழும்பில் நடாத்தியது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட்ட ஊடகவியலாளர், விக்டர் ஐவன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் ​மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் இப்போது எழுந்திருப்பது ஏதேனும் தேர்தல் ஒன்றுக்கான தேவை மட்டுமல்ல. நாம் கலாசார பண்பாட்டு அம்சங்களில் பின்னிற்கும் நாடாகவே இருக்கிறோம்.

இன்னும் இன,சாதி, மத , மொழி பேதங்களால் பிரிந்து கிடக்கிறோம். பாலின உரிமைகளை நிலைநாட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். ஆனால் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தாங்கள் எவ்வாறு பலமடையலாம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டே இயங்குவதை அவதானிக்க முடிகிறது.

அடுத்து வரும்  தேர்தலில் அவர்களின் பலத்தை அதிகரிப்பது தொடர்பாகவே அவர்கள் பேசுகிறார்கள். நாம் மறுசீரமைப்பு செய்து கொள்ளவேண்டிய விடயங்களில் தேர்தலும் ஒன்று. ஆனால் அதனையும் தாண்டி அனைத்து வித மறுசீரமைப்புளையும் வேண்டி நிற்கும் நாடாக இலங்கை இப்போது உள்ளது. அதற்காக மக்கள் அனைவரும் அணிதிரளுங்கள் என தெரிவித்தார்.

இலங்கை காலத்திற்கு  காலம் சிங்கள – தமிழ், தமிழ் – சிங்கள, சிங்கள – முஸ்லிம், மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

நாம் தெரிவு செய்த ஜனாதிபதியை வீதியில் இறங்கி விரட்டியடங்கும் அளவுக்கு தேசம் நலிந்து போய் கிடக்கிறது. இந்த கட்டத்தில் அரசியல் கட்சிகள் தாம் எவ்வாறு பலமடைவது எனும் போக்கில் நடந்து கொள்வது, பாராளுமன்றத்தில் அர்த்தமற்ற விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பது இந்த நாட்டுக்கு பயனளிக்காது.

நாம் நாட்டை மறுசீரமைக்கும் பாரிய பணியில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். தொடர்ந்தும் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டு இருக்கிறோம். இதற்கு எப்போது தீர்வு. நமது பிரசழசினைகளுக்கு தீர்வு காணப்போவது யார்? அதுவும் நாமாகவே இருக்க வேண்டும். நாம் மாற்றம் செய்து கொள்ளவேண்டிய பரப்பு எல்லாத்துறையிலும் இருக்கிறது. நாம் இன்னும் நவீன யுகத்திற்கு காலடி எடுத்து வைக்கவில்லை. தேர்தல் ஒன்றை நடாத்தி விடுவதால் இதற்கெல்லாம் தீர்வு வந்துவிடும் என நாம் எதிர்பார்த்தால் நாம் தொடர்ந்தும் முட்டாள்களாகவே இருக்கிறோம் என்று அர்த்தமாகும்.

நாம் இடைக்கால அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து ஒரு கால எல்லைக்குள் எமக்கு தேவையான மறுசீரமைப்புகளைச் செய்து கொள்ள முன்வரவேண்டும். இது மாதிரியான முயற்சியின் ஊடாகத்தான் தென்னாபிரிக்கா மீண்டெழுந்தது.

அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள பாடங்கள் உண்டு. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களினதும் பிரச்சினைகளை தீர்க்க அந்தந்த இனக்குழுமங்களின் தலைவர்கள் இதய சுத்தியோடு முன்வரவேண்டும்.

ஏனைய தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அதற்கான ஆரம்ப கட்ட முயற்சியை அந்த மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம் முன்னெடுக்கவுள்ளது அதற்கு ஊடகங்களும் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும். நாம் அரசியல் கட்சிகளுக்கு அர்த்தமுள்ள வகையில் அழுத்தங்களைக் கொடுப்போம் என்றார்.

முன்னாள் எம்பி திலகர் கருத்து தெரிவிக்கையில் கடந்த 75 ஆண்டுகளாக இலங்கைக்கு என்ன நடந்தது? ஏன் நாங்கள் தோல்வியடைந்த தேசமாக இருக்கிறோம் என இளைய தலைமுறை கேட்கும் கேள்விகளுக்கு காரணமான இந்த நாட்டின் மூத்தவர்களும் நடுத்தர வயதினரும் வெட்கப்பட வேண்டும்.

நாம் நமது தேசத்தை தொலைத்து விட்டு நமது சொத்துக்களை விற்று இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எதிர்கால தலைமறைக்கு நாம் எதனை விட்டுவைக்கப் போகிறோம்.

கடந்த 75 ஆண்டுகளாகவே அரசாங்கம் கவிழந்தவுடன் அடுத்த தேர்தலில் தலைவர்களை மாற்றிக் கொண்டொமே தவிர எமக்கு தேவையான முறைமைகளை மாற்றிக் கொள்ள தயாராக வில்லை. எமக்கு அரசியலமைப்பு மாத்திரமல்ல, தேர்தல், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், பொது நிர்வாகம் என அனைத்திலும் மாற்றத்தை வேண்டி நிற்கும் நாடாக இருக்கிறோம்.

அத்தகைய ஒரு மாற்றத்துக்கான ஒரு ஏற்பாடாகவே மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம் ஒரு முன்மொழிவு ஆவணத்தை தயாரித்து நாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கிறது. உண்மையில் அரகலய எனும் மக்கள் போராட்டத்திற்கு முன்பதாகவே நாங்கள் இந்தக் கலந்துரையாடலை மேற்கொள்ளத் தொடங்கி இருந்தோம். இன்றைய ஊடகச் சந்திப்பு பொதுமக்களுக்கான ஓர் அழைப்பாகும். எம்மால் நாட்டி ஜனாதிபதியை பதவியில் இருந்து இறக்கி அனுப்ப முடியுமெனில் நமக்கான மாற்றத்தையும் நாமே செய்ய முடியும்.

விக்டர் ஜவன் முன்மொழியும் இடைக்கால அரசியல் அமைப்பில் அமையும் இடைக்கால அரசாங்கத்தினை ஐ. நா குழு கண்காணிக்க வேண்டும் எனும் முன்மொழிவும் அடங்குகிறது.

அது சாத்தியமானதும் கூட. வெறுமனே சர்வதேசம் தலையிட வேண்டும் எனும் வெற்றுக் கோஷத்தை முன்வைக்காமல் சர்வதேசம் பங்கு கொள்ளக்கூடிய களத்தை நாம் உருவாக்குவோம். நாம் கண்டடைய வேண்டிய வெற்றி யை இலங்கையின் அடுத்த தலைமுறைக்கு பெற்றுக் கொடுப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...