வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்னும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பத்திர சமர்ப்பிப்பு தாமதமாக்கப்பட்டமைக்கு எவ்வித தண்டபணம் அறவிடப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.