சீனாவில் மீண்டும் கொவிட் -19 பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கட்டுப்பாடுகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன.
கொவிட் வைரஸ் முதன் முதலில் பரவிய நாடான சீனாவில் அண்மையில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்து வருகின்றது.
30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சீனாவின் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.