கண்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
48 இலட்சம் ரூபாய் மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இது தொடர்பில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற லக்ஷ்மன் கிரியெல்ல,
நேற்று ஒரு மருத்துவர் என்னை அழைத்தார். புற்றுநோய் பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மருந்து வழங்குதல், கதிரியக்க செயற்பாடு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
நான் அமைச்சர் கெஹலியவிடம் நேரில் உரையாடி மின்சார கட்டணத்தை செலுத்தி நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.