அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 10 பேரைக் கொன்றுள்ளார்.
அதே கடையின் கடை மேலாளர் என நம்பப்படும் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு செய்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிதாரியும் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். மேலும் பலர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வெர்ஜீனியா மாநில செனட்டர் லூயிஸ் லூகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது மாவட்டத்தில் உள்ள வெர்ஜீனியாவின் Chesapeake நகரின் வால்மார்ட் அங்காடியில் நடந்த அமெரிக்காவின் சமீபத்திய வெகுசன துப்பாக்கிச் சூடு சம்பவம் என் இதயத்தை நொறுக்கியது.
நம் நாட்டில் பல உயிர்களை பறித்த இந்த துப்பாக்கிச் சூடு வன்முறை தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் வரை நான் ஓய மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.