Date:

ஆசிரியரை சரமாறியாக தாக்கிய மாணவனின் தந்தை

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர் மீது மாணவனின் தந்தை ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த ஆசிரியர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பிச் சென்று , தனது தந்தையை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார்.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை தட்டிப்பறித்த சிங்கக் குட்டிகள்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்...

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...