ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் இருந்து நாட்டிற்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலைய பிரமுகர் முனையத்தை பயன்படுத்துவதற்கு உரிய பணத்தை செலுத்தவில்லை என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது இலங்கையின் சாதாரன பிரஜையாக மட்டுமே இருக்கும் பசில் ராஜபக்சவுக்கு கட்டுநாயக்க பிரமுகர் முனையத்தில் இருந்து இலவச சேவைகளை பெறும் தகுதி இல்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது.
இதேவேளை பசில் ராஜபக்ஷவை வரவேற்க அங்கு சென்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய குழுவினருக்கு விருந்துபசாரமும் அங்கு தயார் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பிரமுகர் முனையத்தை பயன்படுத்த ஒரு நபருக்கு $200 செலுத்த வேண்டும், ஆனால் அந்த பணத்தை பசில் இதுவரை செலுத்தப்படவில்லை என்று அறிக்கை மேலும் கூறியது.