கண்டி – அஸ்கிரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (20) காலை புகையிரதத்தில் மோதி 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி மேலதிக வகுப்பை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.