மில்லியன் டொலர் பணப் பரிசை வெற்றிக்கொள்ளும் கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியொன்றின், இறுதிச் சுற்றில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பிலான கேள்வியொன்று எழுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ABC தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு மக்கள் போராட்டத்தினால், நாடொன்றின் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்திய பெருங்கடலின் மாலைத்தீவை நோக்கி அவர் பயணித்துள்ளார். இந்த ஜனாதிபதி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு, இரண்டு போட்டியாளர்கள் ”இலங்கை” என பதிலளித்துள்ளனர்.
ஏனைய போட்டியாளர்கள் அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.