Date:

அடுத்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்

எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் அதற்கு முன்னர் வரி மீளாய்வு நடத்தி VAT இல் இருந்து விலக்கு பெறக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் தனித்தனியான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், புதிய VAT சட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் VAT வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது VAT வரி அமல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

இது தவிர, தற்போது VATக்கு உட்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் மீது 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதன் சதவீதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விலை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறையில் ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களுக்கும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் VAT வரி பொருந்தும். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர அனைத்து அரசாங்க சேவை கட்டணங்களும் 20 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. நெடுஞ்சாலை கட்டணம், திருமண பதிவு கட்டணம், நிறுவன பதிவு கட்டணம் உள்ளிட்ட பல வகையான கட்டணங்களும் அதற்கேற்ப அதிகரிக்கும்.

இதுவரை எரிபொருள், மின்சாரம், போக்குவரத்துத் துறைகளில் இருந்து VAT வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, ஆண்டுக்கு 1 சதவீதம் வருமானம் இழக்கப்படுவதாக வரவு செலவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...