Date:

திலினி பிரியமாலி பாணியில் 2000 கோடி மோசடி!

பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி   பாணியில் 2000 கோடி ரூபா இணைய மோசடி தொடர்பில் சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை மிக நுணுக்கமாக ஏமாற்றி இணைய வழியால் சுமார் 2000 கோடி ரூபா மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

40% முதல் 90% வரையான வட்டி வீதத்தில் பணம் தருவதாகக் கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகளை நடத்தி சுமார் இரண்டு வருடங்களாக இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

அதிபர்கள், பாதுகாப்புத் துறைத் தலைவர்கள், பிரபுக்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நிதி மோசடிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இணையத்தில் நிதி மோசடிகள் வேகமாக அதிகரித்துள்ளன.

சிலர் வங்கிகளில் லட்சக்கணக்கான ரூபா கடன் பெற்று, ஒன்லைன் மோசடி செய்பவர்களிடம் அதிக சலுகைகளைப் பெறுவதற்காக பணத்தைக் கொடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இணையத்தில் மிக நுட்பமான முறையில் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மக்கள் இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்காது அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...

கடந்த ஆறு மாதத்தில் அரச வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின்...

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்குப் பிணை

சர்ச்சைக்குரிய கரம் பலகைகள் பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை...

மருத்துவர்கள் வெளியேறுவதால் நாட்டுக்கு சிக்கல்

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில்...