வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் குறித்த நேர அட்டவணையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, செவ்வாய்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய இரு தினங்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரையான காலத்திற்குள் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், 21ம் திகதி திங்கட்கிழமை மதிய நேரத்தில் ஒரு மணி நேர மின்வெட்டும், இரவு நேரத்தில் ஒரு மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.