இரசாயனப் பதார்த்தங்களின் பற்றாக்குறையால் இரத்தப்பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைகள் பல தெரிவித்துள்ளன.
லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இவ்வாறு இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், தனியார் ஆய்வகங்களில் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு நோயாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இரசாயனப் பதார்த்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் வைத்தியசாலை அமைப்பு வீழ்ச்சியடையாது என காசல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.