இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டுவென்ரி டுவென்ரி உலகக் கிண்ணப் போட்டி சூடுபிடித்துள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. HNB FINANCE கிரிக்கெட் ஃபீவர் என பெயரிடப்பட்ட இந்தப் போட்டியில் பங்குபற்றி, வெற்றி பெறும் விளையாட்டு ரசிகர்களுக்கு, கிரிக்கெட் ஜெர்சி உட்பட, HNB FINANCE வழங்கும் பிரத்யேக பரிசுகளை வெல்லலாம்.
HNB FINANCE சமூக ஊடக வலையமைப்பில் வெளியிடப்பட்ட தொடர்புடைய Linkஇல் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நீங்கள் HNB FINANCE ‘Cricket Fever’ போட்டிக்கு பிரவேசிக்கலாம் மற்றும் வெற்றியாளர்கள் உள் நுழைபவர்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள். போட்டியில் இணைவதற்கான காலம் அக்டோபர் 22 முதல் நவம்பர் 13 வரை. நவம்பர் 13 ஆம் திகதிக்குப் பிறகு HNB FINANCE இன் சமூக ஊடக வலைப்பின்னலில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்தப் போட்டி தொடர்பான சமீபத்திய தகவல்களை HNB FINANCE இன் Facebook, Instagram, YouTube, Twitter, TikTok மற்றும் Linkedin சமூக ஊடக வலையமைப்புகளில் காணமுடியும் மற்றும் போட்டிக்கான நுழைவு Linkஐ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், அதிகமானோர் HNB FINANCE Cricket Fever போட்டியில் இணைந்து கொள்ளலாம் என HNB FINANCE தெரிவித்துள்ளது.
“எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் புத்தாக்கமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களை இணைக்க நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம். வாடிக்கையாளர்களுடன் பயனுள்ள உறவைப் பேணுவதே எப்பொழுதும் எங்களின் நோக்கமாகும், அதற்காக நாங்கள் எப்போதும் உழைத்து வருகிறோம். சமூக வலைப்பின்னல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் திட்டங்கள் மூலம் HNB FINANCE துறையில் முன்னணியில் உள்ளது மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புத்தாக்கமான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விளம்பர திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், HNB FINANCE சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலம் ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.” என சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி உதார குணசிங்க தெரிவித்தார்.