இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம், பிணை வழங்கியுள்ள நிலையில், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
டிண்டர் (TINDER) உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை (APPS) பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய டேட்டிங் வலைத்தளங்களையும் பயன்படுத்த நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனுஷ்க குணதிலக்கவை, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு நாளாந்தம் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அவருக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முறைப்பாட்டாளர் தரப்பை சந்திப்பதற்கும், அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இந்த மாதம் 2ம் திகதி 29 வயதான யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.
உடலுறவு கொள்வதற்கு தான் அனுமதி வழங்கிய போதிலும், தனது கோரிக்கைகளை நிராகரித்து தனுஷ்க குணதிலக்க தன்னை வலுக்கட்டாயப்படுத்தியதாக முறைப்பாட்டில் குறித்த யுவதி தெரிவித்திருந்தார்.
ஆணுறையை பயன்படுத்துமாறு தான் கோரிய போதிலும், தனுஷ்க குணதிலக்க அதனை நிராகரித்திருந்ததாக யுவதி முறைப்பாடு செய்திருந்தார்.
அதேவேளை, தனது கழுத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் நெறித்ததாகவும் அவர் கூறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க அந்த நாட்டு பொலிஸாரினால் இந்த மாதம் 6ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
சுமார் 11 தினங்களில் பின்னர், தனுஷ்க குணதிலக்கவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.