Date:

நானுஓயா கெல்சியில் லொறி விபத்து; ஒருவர் பலி

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் நேற்று (16) இரவு லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 50அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்

இவ்வாறு உயிரிழந்தவர் கெல்சி தோட்டத்தை சேர்ந்த டோம்னிக் அனுசன் எனவும் இவர் 22 வயதான ஒரு வயதும் ஆறுமாத பெண் பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இன்று காலை பாடசாலை செல்லும் மாணவர்கள் கண்டு உறவினர்களிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸ்சார் மேலும் தெரிவித்தனர்.

கெல்சி தோட்டத்தில் இருந்து டெஸ்போட் நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து லொறியின் வேகத்தினை கட்டு படுத்த முடியாமல் ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

செ.திவாகரன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....