Date:

கொழும்பில் அமைதியின்மை! பொலிஸார் குவிப்பு

கொழும்பு – மாகமசேகர மாவத்தை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் வீதி நாடகம் செய்ய வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் அதனை மீறி ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் வீதி நாடகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அறிவுறுத்தலை மீறி நடந்து கொண்டதாக தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நாட்டில் தற்போதுள்ள பிரதான பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறித்த நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அணியின் மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ளனர்.

இதில் பெண்கள் அதிகளவானோர் செம்மஞ்சள் நிற உடை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டி தலையில் அணிந்து, செம்மஞ்சள் நிற கொடிகளை ஏந்திய வண்ணம் கலந்து கொண்டுள்ளதுடன், ஹிருணிக்கா பிரேமசந்திரவும் கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...