Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டங்களில் திருத்தம்

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு விடயத்தில் காலங்கடந்த சட்டங்களை நீக்கி புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த  வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ரியாதிலுள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போதே  அவர் இதனைக் தெரிவித்தார்.

சவுதியில் தொழில் புரியும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக மேற்கொண்ட விஜயத்தின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பினால் வழங்கப்படும் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகளை சவுதி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்பவர்களின் பாதுகாப்பு முக்கியமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு உரிய தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதகாவும் அமைச்சர் கூறினார்

நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் பொறுப்பு கூற வேண்டும் . தற்போதைய சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களில் செயற்படுமிடத்து, நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...