Date:

பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

பண்டிகைக் காலத்தில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்ணான்டோ இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர்  கூறியுள்ளார்.

தற்போது கட்டுப்பாட்டு விலையில் உள்ள பொருட்களின் விலையை எதிர்வரும் ஜனவரி மாதம்வரை பேணுமாறும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உணவு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள விலையை விட குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடிந்தால் அந்தச் சலுகையை பொதுமக்களுக்கு வழங்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் கொடிகார தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

34 வெற்றி, 38 தோல்வி : இலங்கை அணிக்கு பேரிடி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின்...

இன்று இரவு விலகுகிறார் சனத்

இன்றைய SL vs Pak போட்டிக்குப் பிறகு Sanath Jayasuriya அவர்கள்...

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் விசேட அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல்...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி...