Date:

வீடொன்றில் இரு குழந்தைகளை கைவிட்டுச் சென்ற பெற்றோர்!

பெற்றோர் தனது குழந்தைகள் இருவரை வீடொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது.

இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று இரவு அம்பலாங்கொடை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அதன்படி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு குழந்தைகளையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

2 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...