யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ள நிலையில், மனைவி, பிள்ளையை காணவில்லை என அதிகாலை 2 மணியளவில் கணவன் தேடியுள்ளார்.
காலையில்குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளது. இந்த நிலையில் தாயை காணவில்லை.
சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிருசுவில் தெற்கு, மிருசுவிலைச் சேர்ந்த பிரகாஷ் காருண்யா (7 மாதம் )என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.