மூன்று மாதங்களாக முதியோர் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமுர்த்தி வங்கியில் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ஆனால் மூன்று மாதங்களாக அது கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்த விமல் வீரவங்ச எம்.பி., இந்த நெருக்கடியான நிலையில் முதியவர்களுக்கு வழங்கப்படும் குறித்த கொடுப்பனவு அவர்களுக்கு பெறுமதியான ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டார்.
முதியோர் கொடுப்பனவை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் விமல் வீரவன்ச எம்.பி. கேட்டுக்கொண்டார்.