Date:

கடை ஒன்றுக்குள் புகுந்து பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய கொள்ளையர்கள்

கடை ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கடை உரிமையாளரான பெண்ணை மயக்கமடையும்வரை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த நகை மற்றும் கடையிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் மஹரகம – அரவ்வல – பன்னி்பிட்டிய வீதியில் உள்ள கடை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியின் இலக்கம் மற்றும் நிறம் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்கினர்.

இதனடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் “சுவசெரிய” அம்பியூலன்ஸ் மூலம் காயமடைந்த பெண்ணை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அரவ்வல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய இந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...