எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டிக்கான கட்டணத்தைக் குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு தினமும் 5 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட வேண்டுமென அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.