Date:

ரஷ்ய ஆஸ்பத்திரியில் ஒக்சிஜன் விநியோகத்தில் தடை; கொரோனா நோயாளிகள் பலி

ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான வடக்கு ஒசேஷியா அலனியாவின் தலைநகர் விளாடிகாவ்காசில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் ஒக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரிக்கு ஒக்சிஜன் விநியோகம் செய்ய பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஒக்சிஜன் குழாயில் நேற்று முன்தினம் மாலை திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகளுக்கான ஒக்சிஜன் விநழயோகம் தடைப்பட்டது.‌ இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு ஒக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வந்து நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்கத் தொடங்கினர். இதன் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...