Date:

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

பெரிய வெங்காயத்தின் விலை வழக்கு மாறாக அதிகரித்துள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, பொதுச் சந்தைகளில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, மரக்கறிகளின் விலையும் வழமையை விட அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர, நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 420 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் போன்சீ 520 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோவா 360 ரூபாவாகம், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணி 280 ரூபாவாகம், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும், தேசிகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தக்காளி 440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...