Date:

வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய இணையதளம் மற்றும் விநியோக சேவையை அறிமுகப்படுத்துகிறதும் Alumex

இலங்கையின் மிகப்பெரிய முழுமையான ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தியாளரும், Haleys குழுமத்தின் அங்கத்தினருமான Alumex, நாடு முழுவதும் மொத்த மற்றும் சில்லறை அலுமினிய பொருட்கள் மற்றும் உபகரண விநியோக சேவைகளுக்காக www.alumexstore.com என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

www.alumexstore.com இணையதளம் நாட்டிலுள்ள ஒரு அலுமினிய உற்பத்தியாளரால் மொத்த மற்றும் சில்லறை அலுமினிய பொருட்கள் மற்றும் உபகரண விநியோக சேவைகளுக்காக நிறுவப்பட்ட முதலாவது இணையதளமாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உயர்தர அலுமினியப் பொருட்களை ஒன்லைனில் வாங்கவும், அவர்களின் வீட்டு வாசலுக்கே வந்து விநியோகம் செய்யவும், உள்ளூர் Alumex களஞ்சியங்களில் இருந்து நேரடியாக வாங்கவும் உதவுகிறது.

“இலங்கையின் மிகப் பெரிய அலுமினிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் என்ற வகையில், நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள எமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட் உத்திகளை அறிமுகப்படுத்தும் ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் சேவைகள் தேவைப்படும் அனைவருக்கும் இந்த திறமையான விநியோக முறையின் மூலம் சேவைகளைப் பெறுவது எளிதாக இருக்கும், மேலும் இந்த புதிய இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியும்.” என Alumex இன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெத்திவல தெரிவித்தார்.

வாடிக்கையாளர் பற்றுச் சீட்டு மற்றும் விநியோக தரவின் பாதுகாப்பை உறுதி செய்வதால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை இணையதளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். மேலும், பாவனையாளர்கள் ஒன்லைனில் தயாரிப்புகளை ஒப்பிட்டு, தங்களுக்கு எது சிறந்தது என்பதைப் பற்றிய நல்ல புரிதலைப் பெறவும் முடிவதுடன் சிறப்பு விளம்பரங்கள், ஃபிளாஷ் விற்பனை மற்றும் துறையின் புதிய போக்குகள் பற்றிய சமீபகால தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய விநியோக சேவையை அனுபவிக்கும் போது, Cash on Delivery மற்றும் கிரெடிட்/டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...