இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, பல தசாப்தங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருவதுடன், இலங்கைக்கு வெளிநாட்டுப் நாணயம் வருவதை அதிகரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியால் (CBSL) முறையாக இலக்கைக்கு பணம் அனுப்பும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதனால் அதன் நன்மைகளை அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் வழங்குவதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், “நாட்டை வெல்லும் சிறுவர்கள்” என்ற பெயரில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிள்ளைகளின் திறமைகள் மற்றும் திறன்களை மதிப்பிடுவதற்கு HNB புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சு, சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், SLT மொபிடெல் மற்றும் HNB அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் அனுசரணையுடன், HNB நாட்டை வெல்லும் சிறுவர்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளைஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிள்ளைகள் சித்திரம், நடனம், இசை மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற கலைகள் மற்றும் இலக்கியங்களில் அவர்களின் திறமைகளை மதிப்பிடுவார்கள்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களும் அவர்களது பிள்ளைகளும் அந்நிய செலாவணியை ஈட்டுவதில் செய்யும் தியாகங்களைப் பாராட்டுவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இது தவிர குழந்தைகளின் திறமைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பின்னணியை உருவாக்க முடியும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத பல இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவ்வாறான வேலைத்திட்டங்களினூடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய அவர்களை ஊக்குவிப்பது அவர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த நன்மைகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்கான மிக முக்கியமான படியாகும்.
தாய் அல்லது தந்தை அல்லது தாய் மற்றும் தந்தை இருவரும் வெளிநாட்டில் பணிபுரியும் குடும்பத்திலுள்ள குழந்தை பருவ (பாலர் மற்றும் 5 வயதுக்குட்பட்ட) அல்லது பள்ளிக்கு பிந்தைய வயது (13 ஆம் வகுப்பு அல்லது அதற்கு குறைவான மாணவர்கள்) குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இந்தப் போட்டிகள் 6 பிரதான வயதுப் பிரிவுகள் மற்றும் 4 பிரதான போட்டிப் பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளதுடன், ஒவ்வொரு வயதினருக்கும் கீழ் உள்ள போட்டியாளர்களுக்கான போட்டி வாய்ப்புகள் பின்வருமாறு. இந்தப் போட்டியில் முன்பள்ளி முதல் தரம் 13 வரையான சிறார்கள் சித்திரம், பாடல், நடனம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழும், தரம் 3 முதல் தரம் 13 வரையான சிறுவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும். மேற்படி வயதுப் பிரிவுகளின் கீழ் நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளுக்கும் அகில இலங்கை மற்றும் மாவட்ட மட்டத்தில் தனித்தனியாக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் பிள்ளைகளுக்குப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அனைத்து படைப்பாற்றல்களும் மார்ச் 15, 2023க்குள் HNBக்கு அனுப்பப்பட வேண்டும்.
இந்த போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.hnb.net என்ற இணையத்தளத்திற்கு மற்றும் உங்கள் பாடசாலைக்கு அருகிலுள்ள HNB கிளைக்குச் சென்று அல்லது HNB வாடிக்கையாளர் சேவை இலக்கமான 011 2 462 462 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் மேலதிக விவரங்களைப் பெறலாம்.