உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நீதிமன்றம் இன்று (02) பூரணமாக விடுதலை செய்து அறிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் இந்த தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.