Date:

சிரேஷ்ட மாணவர்கள் தாக்கியதாக பல்கலைக்கழக மாணவன் முறைப்பாடு

சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர் தனக்கு பகிடிவதை அளித்ததாக களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், கிரிபத்கொடை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று தனது விரிவுரைகளின் பின்னர் விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழக விளையாட்டு திடலுக்கு சென்று கொண்டிருந்தபோது சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தான் தாக்கப்பட்டதாக குறித்த மாணவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் குழு தன்னை பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்று தலைமுடி மற்றும் தாடியை மழிக்குமாறும், சப்பாத்துகளுக்கு பதிலாக செருப்பு அணியுமாறு கூறியதாகவும், பின்னர், மூன்று பேர் தன்னை முகம் மற்றும் உடலில் தாக்கியதாகவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது சம்பவ இடத்தில் 7 மாணவர்கள் இருந்ததாகவும் அவர்கள் பெயர் தெரியவில்லை எனவும், நேரில் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் சம்பந்தப்பட்ட மாணவர் பொலிஸார் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, தொடர்புடைய மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...

சம்பூர் மனித புதைகுழி: 30 க்கு பின்னர் தீர்மானம்

எஸ்.கீதபொன்கலன் சம்பூரில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் தொடர்ந்து...