பதுளை பொது வைத்தியசாலையில் இருந்து மூளைச்சாவு அடைந்த நபரின் சடலத்தை இலங்கை விமானப்படையினர் இன்று (31) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்
இலங்கை விமானப்பபடைக்கு சொந்தமான இலக்கம் 4 ஹெலிகொப்டர் பெல் 412 ரக விமானம் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது
இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த மூளைச்சாவு அடைந்த நபரின் முக்கிய உடல் உறுப்புகளை ஏனைய நோயாளர்களுக்கு தானமாக வழங்குவதற்கும் குறிப்பாக இலங்கையில் முதன்முறையாக மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் இதய மாற்று சத்திரசிகிச்சையை செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.