Date:

திருடப்போன வீட்டில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு தூங்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அங்கு சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு போதையில் தூங்கிவிட்டனர்.

இந்தநிலையில் இன்று (26) காலை வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தவேளை திருடர்கள் இருப்பதை அவதானித்துவிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.

இதன்போது ஒரு திருடன் தப்பித்து சென்ற நிலையில் மற்றொருவர் கிராமவாசிகளின் கைகளில் அகப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த நபர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அதேவேளை, தப்பித்து சென்றவர் மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும் திறந்த பிடியாணை ஒன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...