Date:

மின்சாரம் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிப்பு?

மின் கட்டணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நூற்றுக்கு 30 வீதத்தால் மின்சார கட்டணத்தினை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே நூற்றுக்கு 75 வீத மின் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ள போதிலும், மேலும் 30 வீத கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என ரஞ்சன் ஜயலால் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை மின் கட்டணத்திற்கு அறவிடுவதன் வாயிலாக மின்கட்டணம் மறைமுகமாக இங்கு அதிகரிக்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜயசேகரவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...