இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடவும், இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட HIV தொற்றாளர்களில், இளம் பௌத்த பிக்குகளும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென, பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக மாணவர்களும் இவர்களில் அடங்குவதாக தெரிய வருகின்றது.
இலங்கையில் HIV தொற்றாளர்களில் பெரும்பாலானோர் இளம் சமூகத்தினர் என அறிய முடிகின்றது.
15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட தரப்பினரே அதிகளவில் இந்த தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.