Date:

மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு – புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் அபாயம்

வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பற்றாக்குறை காரணமாக புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் அதிகளவான நோயாளிகள் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை உள்ளன.

இதுவரை 15 மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்காததால், நோயாளிகள் அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகங்களில் அவற்றை வாங்க வேண்டியுள்ளது.

அரச மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (என்.எம்.ஆர்.ஏ) மருந்துகளின் விலையை அவ்வப்போது உயர்த்துவதால், மருந்துகளின் விலை கிட்டத்தட்ட 300வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு குப்பியின் போன்ற மருந்துகளின் விலை 300,000 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் மருத்துவத் துறையின் மூலம் இந்த பற்றாக்குறை மருந்து வகைகளை நிரப்புவதற்கான சரியான திகதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...