அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்வது பற்றிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் யாது என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் பெரேரா கேட்ட வாய்மொழி மூலமான வினாவுக்கு விடையளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அதற்கிணங்க போட்டிப் பரீட்சை ஊடாக ஆசிரியர் சேவைக்கு ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக் கிடைப்பதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.