பல பில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலியை விடுதலை செய்வதற்காக தான் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திலினி பியமாலியை விடுதலை செய்வதற்காக தான் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, உண்மைக்கு புறம்பானது எனவும், இந்த சம்பவம் தொடர்பில் தான் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திலினி பியமாலியை விடுதலை செய்வதற்காக தான் பொலிஸாருடன் கலந்துரையாடியதாக, சமிந்த விஜேசிறி முன்வைத்த குற்றச்சாட்டு போலியானது எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தானும்;, தனது குடும்பத்திலுள்ளவர்களும் திலினி பியமாலியுடன் எந்தவித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.