எதிர்வரும் நத்தார் தின பண்டிகையை கொண்டாடும் வகையில், கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கர்தினால் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.
நீர்கொழும்பு புனித தெரேசா தேவாலயத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை அலங்காரம் செய்யும் வகையில், பணத்தை வீண்விரயம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டே, தான் இந்த கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
இன்று பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு நத்தார் தினத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு ஒரு நேர உணவையேனும் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.