மட்டக்களப்பில் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட இளைஞரின் உடல் நேற்று(17) கல்லியங்காடு கத்தோலிக்க மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த வருடம் ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸ் காவலிலிருந்த போது உயிரிழந்திருந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைகள் முடிவுற்று மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படிருக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் உடல் மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டு நேற்று(17) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை நாளை(19) மீண்டும் நடைபெறவுள்ளது.