முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று (ஒக்.18) பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ{மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பதிவு செய்யப்பட்ட தரவுகளை மீள பதிவேற்றம் செய்து, அதனூடாக முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கு ஓரிரு வாரங்கள் எடுக்கும் என கூறிய அவர், தரவுகள் பதிவேற்றப்பட்டவுடன் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.